ADVERTISEMENT

கோடியக்கரையில் முகாமிட்டுள்ள கடற்படை கப்பல்! அச்சத்தில் மக்கள்! 

05:24 PM Mar 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரை கடற்கரையில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர்கிராப்ட் ரோந்து கப்பல் நின்றதால் கடலோர பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. கடலிலும் நிலத்திலும் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் ராமேஸ்வரத்திலிருந்து கோடியக்கரை வரை வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் திடீரென்று கோடியக்கரையின் கரையோரத்தில் ரோவார் கிராப்ட் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதே பரபரப்புக்கு காரணம்.

இலங்கையிலிருந்து வேதாரண்யம் வழியாக தங்கம் கடத்தும் நபர்களை பிடிக்க இந்த கப்பல் வரவழைக்கப்பட்டுள்ளதா அல்லது எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடல் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிக்க இந்த கப்பல் வர வழைக்க வைக்கப்பட்டுள்ளதா அல்லது இலங்கையில் தற்பொழுது நிதி நிலைமை மோசமாகி கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இருந்து அகதிகளாக மக்கள் எவரேனும் வேதாரண்யம் கடல் பகுதியில் அத்துமீறி நுழைவதை கண்காணிக்கவும் அதற்கான பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த கப்பல் வந்துள்ளதா என மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கடலோர காவல் படை அதிகாரிகளிடம் கேட்டபொழுது, "வழக்கமான ரோந்து பணிக்காக மட்டுமே இந்த கப்பல் வந்துள்ளது" என தெரிவித்தனர். மேலும் ரோவர் கிராப்ட் கப்பலிருந்து பணிக்கு வந்த வீரர்களும் கடலோர காவல் படை வீரர்களும் ஆலோசனை நடத்திவருகின்றனர். திடீரென்று ரோவர் கிராப்ட் கோடியக்கரையில் முகாமிட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT