ADVERTISEMENT

40 நாட்களில் 10 புலிகள் உயிரிழப்பு; தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரணை

07:16 AM Sep 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தின் வனத்தை ஒட்டிய பகுதிகளில் கடந்த 40 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட புலிகள் உயிரிழந்தது வனத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நீலகிரி அவலாஞ்சி பகுதியை ஒட்டியுள்ள நீர் நிலையில் ஒரு புலியும் அதனை ஒட்டிய வனப்பகுதியில் மற்றொரு புலியும் உயிரிழந்து கிடந்தது. அதே நேரம் மாடு ஒன்றும் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் உயிரிழந்து கிடந்ததால் மனிதர்கள் யாரேனும் வேட்டையாடும் நோக்கில் விஷம் வைத்திருக்கலாம் என வனத்துறை சந்தேகித்தது. அதேபோல் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 2 புலி குட்டிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இப்படிக் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்த நிலையில், இன்று தேசிய புலிகள் ஆணையக் குழு விசாரணை நடத்த இருக்கிறது. நீலகிரியின் எமரால்டு, நடுவட்டம், கார்குடி வனப்பகுதிகளில் புலிகள் இறந்த இடத்தில் இந்தக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்த உள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT