நீலகிரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து விலங்குகளை வேட்டையாடும் சிறுத்தையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மேல் காந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர் விசித்ரா. இவர் தான் வளர்த்து வரும் ஆடுகளை அருகில் உள்ள மேய்ச்சல் பகுதிக்கு அழைத்துச் சென்ற பொழுது வனப்பகுதியிலிருந்து திடீரென வெளியேறிய சிறுத்தை ஆடுகளை கவ்விச் சென்றது.
உடனடியாக வனத்துறைக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வரும் நிலையில் வீட்டு விலங்குகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.