ADVERTISEMENT

அதிகார துஷ்பிரயோகம்... போலீஸ் மீது பாய்ந்த தேசிய மகளிர் ஆணையம்...!

08:50 PM Nov 07, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தங்களுடைய சொந்த விவகாரத்திற்காக, அதிகார துஷ்பிரயோகத்தால் விசாரணை எனும் பெயரில் பெண்ணை துன்புறுத்திய போலீஸாரின் விவகாரத்தை கையிலெடுத்து விசாரணையை துவங்கியுள்ளது தேசிய மகளிர் ஆணையம்.

திருநெல்வேலி என்ஜிஓ காலணியை சேர்ந்தவர் வீணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆப்பிள் ஐ-போன் நிறுவனத்தின் லீகல் அட்வைசராக பணியாற்றி வரும் இவர், இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னுடைய குழந்தைகள் கல்விக்காக குன்றத்தூர் சாலை, சென்னை - போரூரிலுள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருகின்றார். இதே அபார்ட்மெண்டில் வசித்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த நபருக்கும் வீணாவுக்கும் முன் விரோதம் இருந்து வந்திருக்கின்றது.

இந்நிலையில், "இந்த அபார்ட்மெண்ட்டில் உள்ள கதவு எண் கொண்ட வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆள் நடமாட்டம் இருந்து வருகின்றது." என டிஜிபி அலுவலகத்திற்கு கடிதம் வந்துள்ளதாகவும், அதன் பெயரில் உங்களை விசாரிக்க வேண்டுமென" விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவேல் என்பவர் அபார்ட்மெண்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு, " நான் இத்தனை வருடமாக குடியிருக்கின்றேன்." என பார்மல் லெட்டர் மட்டும் கொடுங்கள்.. அதனை வாங்கிக் கொண்டு நான் சென்று விடுகின்றேன்." என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு சென்றிருக்கின்றார். மறு நாள், அடுத்த நாள் என விசாரணை எனும் பெயரில் தொடர்ச்சியாக நேரில் வந்தும், போனில் மிரட்டவும் அதே இன்ஸ்பெக்டர் சண்முகவேல் செய்த வேளையில், சந்தேகமடைந்த வீணா, இது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருக்கின்றார். எனினும் முன்னுக்கு பின் முரணான தகவலாக வந்து அலைக்கழிக்கப்பட்ட நிலையில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகாரளித்துள்ளார்.

இதுக் குறித்து பேசிய வீணாவோ, " எந்த அடிப்படையில் விசாரிக்க வந்திருக்கீங்க..? எனக் கேட்டால் பதிலில்லை. உங்களுடைய சொத்துக்கள் எங்கங்கே இருக்கு..? யார் பார்த்துக் கொள்கிறார்கள்..? எனத் தேவையில்லாத கேள்விகளை கேட்டும், என்னுடைய மகனை மிரட்டியும் சென்றிருக்கின்றார். தவறு இருந்தால் என்னை கூட்டி கொண்டு செல்ல வேண்டியது தானே..? அதைவிடுத்து அடிக்கடி என்னை விசாரணை எனும் பெயரில் தொந்தரவு செய்வது ஏன்..? இதுக் குறித்து ஆர்டிஏ-வில் கேட்டேன். எனக்கு அளித்த பதில் மனுவில், பதில் மனு செய்தவரோட முகவரி வேறு.! கையெழுத்து போட்டது வேறு. அதனையும் கேட்டு அப்பீல் செய்தால் பதில் மனுவில் சீரியல் எண் வேறு. அந்த இன்ஸ்பெக்டரைக் காப்பாற்ற காவல்துறையும் போட்டி போட்டு வேலை செய்தது. இதற்கிடையில் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகும் போது தான் தெரிந்தது. இறுதியில் இந்த இன்ஸ்பெக்டர் தனிப்பட்ட ஒருத்தருக்காக, என்னுடன் முன்விரோதம் கொண்டவருக்காக வந்து என்னை அசிங்கப்படுத்தியது தெரியவந்தது. இதற்காக என்னைக் குறித்து ஒரு மொட்டைக்கடிதாசியையும் தயார் செய்து வைத்திருந்தார்கள். அது குறித்து நான் விசாரிக்க அந்த முகவரியும் போலி என தபால்துறை ஒப்புக்கொண்டது. இந்த வேளையில் தான் அந்த முன்விரோத நபர் ஒரு போலீஸ் அதிகாரிக்கு அடிக்கடி பணம் கொடுத்தது தெரிய வர, அந்த ஆவணத்தை வாங்கி பத்திரப் படுத்தியிருக்கேன். தனி நபர் ஒருவருக்காக, காவல்துறை தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யுமா..? எனக் கேள்வி எழுப்பி, நடந்த நிகழ்வுகளை புகாராக சிஎம் தனிப்பிரிவு தொடங்கி அனைவருக்கும் அனுப்பியிருந்தேன். இப்பொழுது தேசிய மகளிர் ஆணையம் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. விரைவில் எனக்கு நீதி கிடைக்கும்" என்கிறார் அவர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT