நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன், விஷ பாம்பு ஒன்றை தனது கழுத்தில் பூமாலை போல் போட்டு வித்தை காட்டிய வீடியோ நேற்று, வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

Advertisment

police

இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே அய்யாவுக்கு போட்டியாக நானும் வித்தை காட்டுவேன் என, காவலர் தட்சிணாமூர்த்தி தேள் ஒன்றை தனது தோள் பட்டையில் உலவ விட்டார்.

Advertisment

"அய்யாகிட்ட மெடிக்கல் லீவ் வாங்க ஏதோ செய்கிறாய் போல என்று ஒரு காவலர் கேட்க, நான் லீவே கேட்கவில்லையே என்று பதில் அளிக்கிறார் காவலர் தட்சிணாமூர்த்தி." இந்த வீடியோவின் பின்னணியில் பாம்பு வித்தை காட்டிய சாம்சனும் இடம் பெற்றிருந்தார்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராமகிருஸ்ணன் என்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒரு அடி நீளமுள்ள பாம்பை தனது மேலே படர விட்டு பார்வையாளர்களை பரபரக்க வைத்தார். இந்த புகைப்படமும் போலீஸாரின் வாட்ஸ்அப் குரூப்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக போலீஸாரின் பெருமை, இப்போது வித்தைக் காட்டும் நிலைமைக்கு கீழே செல்வது ஏனோ?