
ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மினி பேருந்தின் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டதாக தகவல் வெளியாகிபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள மஞ்சங்குலத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா என்பவரை திருவனந்தபுரத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர். 6 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கை காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திசையன்விளை பகுதியில் மினி பேருந்து மீது மர்ம நபர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் மினி பேருந்தின் இருக்கைகள் எரிந்து நாசமாகின. ராக்கெட் ராஜாவின் கைதிற்கு எதிராக அவரது ஆதரவாளர்களால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)