ADVERTISEMENT

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம்...

03:19 PM Oct 26, 2019 | santhoshkumar

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரைசெய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் தொடங்கி பல்வேறு அமைப்புகள் வரை சிறையில் இருக்கின்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று ஆளுநர் தெரிவித்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், இதுகுறித்து அவர் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக 51 நாட்கள் நீதிமன்ற உத்தரவின்படி பரோலில் வெளிவந்தார். ஆனால் திருமண ஏற்பாடுகள் எதுவும் முடிவு செய்யவில்லை இதனையடுத்து பரோலை நீட்டிக்க கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நளினி.

இந்நிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பு வேலூர் சிறையில் உள்ள முருகன் அறையிகிலிருந்து ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டு, ஒரு ஹெட்செட் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக முருகன் மீது பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைதொடர்ந்து முருகனுக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெண்கள் சிறையில் உள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று சிறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். அதனை தொடர்ந்து இன்று காலை உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார் என சிறை அதிகாரிகள் கூறினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT