ADVERTISEMENT

எங்களை நாகர்கோவில் மாநகராட்சியில் சேர்க்காதீர்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு

04:05 PM Feb 15, 2019 | manikandan



கடந்த ஆண்டு செப்டம்பா் 22-ம் தேதி நாகா்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழாவில் நாகா்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தபடும் என்று முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி சட்டசபையில் அதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி 14 ஆவது மாநகராட்சியாக நாகா்கோவில் நகராட்சியை தரம் உயா்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் குறிப்பாக ஒரு மாநகராட்சி என்றால் 10-ல் இருந்து 12 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும். ஆனால் அந்தளவு மக்கள் தொகை நாகா்கோவில் நகராட்சியில் இல்லை. இதனால் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக நாகா்கோவிலை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி மணக்குடி, மேலசங்கரன் குழி, நல்லூா், திருப்பதிசாரம், தேரேக்கால் புதூா், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், கணியாகுளம், பீமநகரி, பறக்கை, புத்தேரி, எள்ளுவிளை, மேலகிருஷ்ணன் புதூா், கேசவன்புத்தனதுறை, பள்ளம்துறை, தா்மபுரம், ராஜாக்கமங்கலம் துறை, ஆத்திகாட்டு விளை ஆகிய 18 ஊராட்சிகள் இணைக்கபட உள்ளன.

இந்த ஊராட்சியை சோ்ந்த மக்கள் நிம்மதியாக கிராம வாழ்க்கையை வாழ்ந்த எங்களால் ஒரேயடியாக மாநகராட்சியோடு ஒன்டி அந்த வாழ்க்கையை வாழ முடியாது. எதற்கெடுத்தாலும் அங்கு வரி செலுத்த வேண்டிய நிலை. சாக்கடைகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் வாழும் நாங்கள் இனி பாதாள சாக்கடைக்கும் குப்பைகளுக்கும் வரி செலுத்த வேண்டும். ஓல வீடு, ஓடு வீடுகளில் வசிக்கும் நாங்கள் மாடி வீடுகளுக்கு உயா்ந்தது போல் வரி செலுத்த வேண்டும். இதனால் எங்களுக்கு மாநகராட்சி வாழ்க்கை தேவைில்லை என்கின்றனா்.


ஆனால் அரசியில் கட்சியினரும் நகர வாசியினரும் மாநகராட்சியை வரவேற்று இருக்கிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT