ADVERTISEMENT

தமிழ் ஆய்வியல் நிறைஞர் படிப்பு; விண்ணப்பம் வரவேற்பு

06:58 PM Sep 02, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி இதற்கான வின்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் (M.Phil), இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றன.

அந்தவகையில் 2023-24ஆம் கல்வியாண்டிற்கான ஆய்வில் நிறைஞர் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது. இப்பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம் 4 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள் மற்றும் தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளது. இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணமில்லா தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ, அஞ்சல் வழியாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் சான்றொப்பமிடப்பட்ட நகலுடன் இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் வாட்ஸ் அப் எண் குறிப்பிட்டு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30.09.2023 ஆகும். மேலும் இது குறித்து தகவல் பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT