rahul

தமிழத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள்அரசியல் கட்சிகள் இடையே தீவிரம் அடைந்துள்ள நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வரும் மார்ச் 13 ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வர இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Advertisment

நேற்று கன்னியாகுமரிக்கு மோடி வருகை தந்ததை அடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மார்ச் 13 ஆம் தேதிதமிழகம் வர உள்ளார்.

Advertisment

இன்று சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் நாளை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.