ADVERTISEMENT

துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு எம்.பி. ஒபிஆர்  மனு!

11:15 PM Feb 29, 2020 | kalaimohan

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மூத்த மகன் ரவீந்திரநாத் குமார் அரசியலில் குதித்ததை தொடர்ந்து கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 78 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணி போட்டியிடும் கூட எம்பி ரவீந்திரநாத் குமார் தவிர மற்ற அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.

இப்படி அதிமுகவில் ஒரே ஒரு எம்பி ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதின் மூலம் பாராளுமன்ற குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர் அது கடைசி நேரத்தில் கைநழுவி போய் விட்டது.

ADVERTISEMENT


அப்படி இருந்தும் கூட தொடர்ந்து மோடிக்கு ஆதரவாக அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். அதோடு முத்தலாக் சட்டத்திற்கு ஆதரவாகவும், குடி உரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். இதனால் முஸ்லீம் அமைப்புகள் உள்பட எதிர்க் கட்சிகள் மத்தியில் ஒருஅதிருப்தி அலையும் ஒபிஆர் மேல் பரவலாக வீசி வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சென்ற ஒபிஆர் மீது முஸ்லீம் அமைப்பினர் சிலர் அவர் காரை தாக்கவும் முயன்றனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தொகுதிக்கு செல்லும்போது எல்லாம் எம்.பி.ஒபிஆர் பலத்த பாதுகாப்புடன் சென்று வருகிறார்.

ஆனால் அரசியல்வாதிகளும், விஐபிகளும் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்கி துப்பாக்கி வைத்துக் கொள்வது வழக்கம் அதுபோல் எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் குமாரும் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் மனு கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவியும் எம்.பி. ஒபிஆர் மனுவை ஆய்வு செய்து வருகிறார். அதன் மூலம் கூடிய விரைவில் துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ்சும் எம்.பி.ஓபிஆர்க்கு கிடைக்கபோகிறது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT