தலையில் குண்டு பாய்ந்த நிலையில் பெண் ஒருவர் ஏழு கிலோ மீட்டர் கார் ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வசித்து வருபவர் சுமித் கவுர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் காரில் சென்றுள்ளார். வண்டி சிக்னலில் நிற்கும் போது அங்கு வந்த ஹல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர், சுமித் கவுரை நோக்கி துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளார்.

Advertisment

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், தலையில் இருந்து வழிந்த ரத்தத்தை கூட பொருட்படுத்தாமல் 7 கிமீ தொலைவில் இருந்த காவல் நிலையத்திற்கு வண்டியை ஓட்டி சென்றுள்ளார். ரத்தம் வழிந்த நிலையில் இளம்பெண் வருவதை கண்ட காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் அவரை 10-வது படிக்கும் அவரின் அண்ணன் மகன்தான் துப்பாக்கியால் சுட்டார் என்பதை கண்டுபிடித்த காவலர்கள், அவரை கைது செய்துள்ளனர். சொத்து தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.