ADVERTISEMENT

எம்.பி. தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்ட தூய்மை பணியாளர்கள்!  

12:51 PM Sep 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான சுப்பராயன் தலைமையில் ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர்கள் சங்கத்தினர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரியிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் சார்பில் உள்ளாட்சித் துறையில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதன் பிறகு அவர்கள் கூறும்போது, "உள்ளாட்சித் துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை அரசு கைவிட வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களுக்கு ரூ. 3,600, டேங்க் ஆபரேட்டர்களுக்கு ரூ. 4,000 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

இவர்களை முழுநேர பணியாளர்களாக மாற்றி, குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ. 15,000 ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அனைத்து உள்ளாட்சிப் பணியாளர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து உள்ளாட்சிப் பணியாளர்களுக்கும் அரசு அறிவித்தபடி ரூ. 15,000 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்" என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT