ADVERTISEMENT

காலையில் கறுப்பு கோட் வழக்கறிஞர், மாலையில் வெள்ளை கோட் டாக்டர்; இருவேடத்தில் மக்களை ஏமாற்றிய போலி!!

07:49 PM Sep 20, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான சரவணன். மல்லவாடியில் வேலூர் திருவண்ணாமலை சாலையில் வீட்டுக்கு வெளியே மெடிக்கல் ஷாப் வைத்து நடத்திவந்துள்ளார். இவர் போலி மருத்துவர், இவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இருந்தும் மாலை நேரத்தில் வெள்ளை கோட் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் ஒருஅறையில் அமர்ந்து படிப்பறிவற்ற ஏழை நோயாளிகளிடம், தான் மருத்துவர் எனச்சொல்லி ஊசிப்போடுவது, மருந்து மாத்திரை தருகிறார் என அப்பகுதி மக்கள் மாவட்ட நீதிபதி மகிழேந்திக்கு புகார் அனுப்பினர்.

ADVERTISEMENT

அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் இருவரும் ஆய்வுக்கு சென்றுள்ளனர். வீட்டு வாசலில் மாருதி 800 கார் நின்றுயிருந்துள்ளது. அதன் கண்ணாடியில் வழக்கறிஞருக்கான ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது. இதை பார்த்தபடியே உள்ளே சென்ற ஆய்வு செய்த நீதிபதி, வீட்டுக்குள் இருந்த சரவணனிடம், நீ டாக்டரா, வழக்கறிஞரா என கேள்வி எழுப்பினார். இரண்டும் இல்லை. நான் பி.காம் வரை படித்துள்ளேன் அவ்வளவு தான் என்றுள்ளான்.


பிறகு எப்படி நீ டாக்டர்ன்னு சொல்லிக்கிட்டு ஊசிப்போடற, வழக்கறிஞர்கள் பயன்படுத்த ஸ்டிக்கரை உன் காரில் ஒட்டியிருக்கற என கேள்வி எழுப்ப போலிஸ்க்கிட்டயிருந்து தப்பிக்கத்தான் இப்படி செய்தன் என்றுள்ளான். உடனே திருவண்ணாமலை தாலுக்க காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் நீதிபதிகள். உடனே போலிஸார் வந்து சரவணனை கைது செய்தனர். இதே நபர் ஏற்கனவே மருத்தவ அதிகாரிகள் ரெய்டு செய்து போலி மருத்துவர் என கைது செய்துள்ளனர், ஜாமினில் வெளியே வந்தவன் மீது ஜே.எம் 1 நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.


நீதிமன்றத்துக்கு சென்ற வந்தபோது, நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை கண்டு போலிஸார் பம்முவதை பார்த்து வழக்கறிஞர் ஆசை வந்து போலியாக தானும் வழக்கறிஞர் என சுற்றிவந்துக்கொண்டுள்ளான். இதனை கேட்டு போலிஸாரும், நீதிபதிகளும் அதிர்ச்சியாகினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT