ADVERTISEMENT

பொம்மன் பெள்ளியை நேரில் சந்திக்கும் மோடி; புதுப்பொலிவு பெரும் தெப்பக்காடு

11:03 AM Apr 05, 2023 | kalaimohan

ADVERTISEMENT

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். குறிப்பாக சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம்-செங்கோட்டை ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைக்க இருக்கிறார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து 8 ஆம் தேதி முதுமலை தெப்பக்காடு பகுதிக்குச் செல்ல இருக்கிறார். இதனால் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி செல்லும் பிரதமர் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை நேரில் சந்திப்பதோடு ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளையும் நேரில் பார்வையிட இருக்கிறார்.

மைசூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9 மணிக்கு மசினகுடிக்கு வருகை தரும் பிரதமர், சாலை மார்க்கமாக தெப்பக்காடு செல்கிறார். இதனால் அந்த பகுதியில் நாளை முதல் வரும் 9 ஆம் தேதி வரை ரிசர்ட்டுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகை காரணமாக அங்கிருக்கும் அரசு அலுவலகங்கள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வன விலங்குகளை காண்பதற்கான வாகன சவாரியும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துப்புரவு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT