Skip to main content

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை... அச்சத்தில் உறைந்த பயணிகள்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

The wild elephant that broke the glass of the government bus ... Passengers frozen in fear!

 

நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை, பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மேல்தட்டப்பள்ளம் எனும் மலை வழிப்பாதை உள்ளது. காப்புக்காடுகள் நிறைந்த இந்தப் பகுதியில் யானை, கரடி போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த வழியில் சாலையில் செல்லும் வாகனங்களைக் காட்டு விலங்குகள் வழிமறிப்பது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வாகும். இந்நிலையில் இன்று (25.09.2021) காலை சுமார் 8.30 மணியளவில் மேல்தட்டப்பள்ளம் மலைப்பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், பேருந்தை வழிமறித்த காட்டு யானை ஒன்று எதிர்பாராதவிதமாக பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்தது.

 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் சில நிமிடம் அச்சத்தில் உறைந்தனர். பேருந்தில் இருந்த ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகிவருகிறது. சிறிது நேரத்தில் யானை பேருந்தின் பின்புறம் சென்றதால் பேருந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வட மாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Tragedy of North State youth CM MK Stalin's obituary

நீலகிரி மாவட்டம் உதகை வட்டத்திற்கு உட்பட்ட பாபுஷா லைன் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய சூழலில் கட்டுமான பணியின் போது இன்று காலை எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 22) மற்றும் ஜாகீர் (வயது 25) ஆகிய இருவரும் மண்ணில் புதைந்தனர்.

இதனை அறிந்த சக பணியாளர்கள் உடனடியாக இது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் மண்ணில் புதைந்த கூலித் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மண்ணில் புதைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு ரிஸ்வானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதே சமயம் விபத்து நிகழ்ந்த இடத்தின் உரிமையாளர் மேத்யூ (வயது 45), மேற்பார்வையாளர் நசருல்லா (வயது 29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவியை அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று 13.03.2024 முற்பகல் தனியாருக்குச் சொந்தமான கட்டுமான பணியின் போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து இருவர் விபத்தில் சிக்கினர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 22) என்பவர் மீட்கப்பட்டு உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு அரசின் சார்பாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியரை உரிய ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்.

Tragedy of North State youth CM MK Stalin's obituary

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் (வயது 25) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.