ADVERTISEMENT

ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

10:12 AM Feb 11, 2024 | prabukumar@nak…

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து நேற்று (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கோயம்பேடு ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிலையத்திற்கு பதிலாக முடிச்சூரில் அருகே உள்ள மண்ணிவாக்கத்தில் ஆம்னி பேருந்து நிறுத்த வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் அமைச்சர்கள் வளாகத்தில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேசினர். அதன்படி சேகர்பாபு பேசுகையில், “முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தில் 150 பேருந்துகள் நிற்கும் அளவிற்கும், 300 பேர் வரை தங்குவதற்கான இடமும், உணவகமும், அலுவலக அறைகளும், கழிவறைகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் பணி ஏப்ரலில் நிறைவு பெறும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என நள்ளிரவில் போராட்டம் நடத்தியதில் உள்நோக்கம் இருக்குமோ என சந்தேகம் அளிக்கிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன ” எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT