ADVERTISEMENT

தமிழகத்தில் முழு ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்!

07:40 PM May 22, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24/05/2021 முதல் மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை தீவிர ஊரடங்கு நடைமுறைக்கு வரும் நிலையில் இது தொடர்பாக நாளை முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கை கண்காணிப்பது, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது போன்றவற்றை அமைச்சர்களின் முக்கிய பணியாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. சென்னைக்கு தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் செங்கல்பட்டுக்கு தா.மோ.அன்பரசன், மதுரை மாவட்டத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பூர் மாவட்டத்திற்கு மு.பபெ.சாமிநாதன், கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சக்கரபாணி, க.ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்டத்திற்கு கே.என்.நேரு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு தங்கம் தென்னரசு, ஈரோடு மாவட்டத்திற்கு முத்துசாமி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏ.வ.வேலு, வேலூர் மாவட்டத்திற்கு துரைமுருகன், விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி, கடலூர் மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு மெய்யநாதன், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆர்.காந்தி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அன்பில் மகேஷ், தேனி மாவட்டத்திற்கு ஐ.பெரியசாமி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மனோ தங்கராஜ் என அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT