ADVERTISEMENT

மாணவனின் மருத்துவக் கல்விக்கு உதவிசெய்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

06:24 PM Nov 23, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் உள்ள, பஞ்சமாதேவி என்ற கிராமத்தில், அரசு காலனியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர், கிராமங்கள்தோறும் சைக்கிளில் சென்று 'ஐஸ்' வியாபாரம் செய்து, தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவரின் மகன் மாரிமுத்து, வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்றார்.

ADVERTISEMENT


பிறகு, நீட் தேர்வு எழுதி, அத்தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில், மாணவன் மாரிமுத்துவுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் வறுமை காரணமாகக் கல்லூரியில் சேர்வதற்கான அடிப்படை கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில், இக்குடும்பம் இருந்துள்ளது.


இத்தகவலை உள்ளூர் அ.தி.மு.க.வினர் மூலம் அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாணவனையும் அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து அம்மாணவனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், அந்த மாணவனின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். அப்போதே, மாணவனின் முதலாம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.20,000 பணத்தை ரொக்கமாக மாணவரிடம் வழங்கியுள்ளார்.


எதிர்பாராத இந்த உதவியால் நெகிழ்ந்துபோன மாணவர் மற்றும் அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். அமைச்சருக்குத் தங்களது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT