சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாணவர் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் சிபிசிஐடி போலீசாரால்கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

neet

இந்த நீட்தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார் இதுதொடர்பாக பல்வேறு விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், நீட் ஆள்மாறாட்டத்தில் மேலும் 2 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இருப்பதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு புகாரில் ஏற்கனவே சிக்கிய மாணவரான உதித்சூர்யா கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இதனை தெரிவித்துள்ளனர்.