ADVERTISEMENT

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் - அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

08:37 AM Nov 12, 2021 | sivarajbharathi

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுக்க பலத்த மழை பெய்துவருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகளும் நிறைந்துள்ளன. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (11.11.2021) கரையைக் கடந்தபோதும் இன்னும் சில இடங்களில் மழை பெய்துவருகிறது. கடந்த 6ஆம் தேதி இரவுமுதல் நேற்றுவரை பொழிந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிவித்திருப்பதாவது, “சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களின் நலன் கருதி மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.” என்று செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT