கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள திமுக எம்எல்ஏசெந்தில்பாலாஜியின் வீட்டில்சென்னைபோலீசார் விசாரணை மற்றும் சோதனைநடத்தி வருகின்றனர்.

Advertisment

 Senthil Balaji's home raided

திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாத நிலையில் அவரின் பெற்றோரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் ஜவுளி ஏற்றுமதி அலுவலகம் அவருடைய தம்பி அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் 95 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் அவர் மேல் இருந்தது.அதிமுகவில் இருந்தபோது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. மோசடிகுறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மட்டுமல்லாது திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.