ADVERTISEMENT

கிராவல் மண் நிரப்பும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு! 

03:47 PM Jul 06, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தவிருக்கும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று துவக்கிவைத்தார். அதன்படி, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கனரக சரக்கு வாகனம் முனையம், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிக்கான மையம், சாலைகள், மழை நீர் வடிகாலுடன் கூடிய இதர உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகளை இன்று துவக்கிவைத்தார். மேலும், ரூ.349.98 கோடி திட்ட மதிப்பீட்டில் அமையவுள்ள திருச்சி மாநகராட்சியின் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ரூ.20.10 கோடி செலவில் 100 ஏக்கர் பரப்பளவில் கிராவல் மண் நிரப்பும் பணிகளையும் துவக்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக மின்கல வாகனங்கள், சிறிய ஜே.சி.பி. வாகனங்கள், புதை வடிகாலில் தூர் வாரும் வாகனங்கள் என ரூ. 390 இலட்சம் மதிப்பிலான 99 வாகனங்களை மக்கள் சேவை பயன்பாட்டிற்காகக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார் மற்றும் கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT