ADVERTISEMENT

"வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது"- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

05:57 PM Sep 29, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT



முன்னாள் மேயர் சிவராஜின் 129- வது பிறந்தநாளையொட்டி, சென்னை தங்கசாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, கடம்பூர் ராஜு, பென்ஜமின், பாண்டியராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது. வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடந்தது. அ.தி.மு.க செயற்குழுவால் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என எதிர்பார்த்து ஏமாந்துள்ளன. அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7- ஆம் தேதி தகவல் வெளியாகும். சசிகலா குறித்து விவாதிப்பது தேவையற்ற விவகாரம்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT