ADVERTISEMENT

எளிய மனிதரின் உயிரைக் காப்பாற்றிய அமைச்சர்!

06:36 PM Mar 14, 2024 | ArunPrakash

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் உள்ள ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சங்கர்(50). திமுகவின் தீவிரமான தொண்டராக இருந்து வரும் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சங்கரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கரை மேல் சிகிச்சைக்காக வெளியூர் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் அவருக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எங்கு சிகிச்சை பெறுவது என்று குழம்பிப் போயிருந்த சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விடுத்தாசலம் திமுக நகரச் செயலாளர் தண்டபாணி, நகர தலைவி சங்கவி முருகதாஸ் சங்கரை நேரில் சந்தித்து உடல் நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து, சங்கரின் உடல் நிலை குறித்து தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசனிடம் தொலைபேசியின் மூலம் தெரிவித்துள்ளனர். அனைத்தையும் கேட்டுகொண்ட அமைச்சர் சங்கரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வையுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் கூறியுள்ளார். அதன்பேரில் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னைக்கு சென்றனர். அவரிகளிடம் பேசிய அமைச்சர் கணேசன், தனது உதவியாளரை அழைத்து எந்த மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கலாம் என்று விசாரிக்க சொல்லியுள்ளார். அவரும் விசாரித்து ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிக்கிச்சை அளிக்க வேண்டும் என்று கூற, உடனடியாக அமைச்சர் கணேசன் மருத்துவமனை முதல்வரை போனில் அழைத்து சங்கரின் உடல்நிலை குறித்து கூறி அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சங்கர் குடும்பத்தோடு மருத்துவமனை செல்லும் போது உயர் மருத்துவ அதிகாரி வந்து பார்த்துவிட்டு உடனே தீவிர சிகிச்சை பிரிவில் சங்கரை அனுமதித்து சிறப்பான முறையில் சிகிச்சை அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 18 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சங்கரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

“ஒரு எளிய கட்சி உறுப்பினரான எனக்கு சிறப்பாக கவனம் எடுத்துக் கொண்டு எனது உயிரை காப்பாற்ற உதவி செய்த அமைச்சரை நானும் என் குடும்பத்தினரும் என்றும் மறக்க மாட்டோம். வேறு எந்த மருத்துவமனைக்கு சென்று இருந்தாலும் இது போன்று சிறப்பான சிகிச்சை கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே? அமைச்சரால் இன்று எனது உயிர் காப்பாற்றப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளேன். எனக்கு உதவி புரிந்த அமைச்சர் அவர்களுக்கும்.. விருத்தாச்சலம் நகர செயலாளர் தண்டபாணி மற்றும் நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகள் என்று நம்மிடம் கூறிய சங்கர் மருத்துவமனையில் இருக்கும் போது சில கட்சியின் தோழர்கள் பலர் எனது உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துள்ளனர். ஆனால் அப்போது எனக்கு நினைவு இல்லை என்பதால் அவர்கள் யார் யார் என்று கூட தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த கட்சி நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நானும் என் குடும்பத்தினரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிறார்கள் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT