திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவப் பிரிவில் பயன்படுத்தப்பட்டு வந்த எண்டோஸ்கோப்பி கருவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மாதம் இதே போன்று பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்டோஸ்கோப்பி மாயமான நிலையில் மீண்டும் மற்றொரு எண்டோஸ்கோப்பி கருவி மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்களை கொண்டு முதல்கட்ட விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை காணாமல் போன எண்டோஸ்கோப்பி கருவியின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.