ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

10:48 AM Nov 22, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திடீரென அரசுப் பள்ளிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசுப் பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளி, ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிக்கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்று ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் கூடத்திற்கும் சென்று சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நான் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் கூட்டத்தில் பேசுகிறேன். இது பெருமையாக உள்ளது. நமக்கு என்று ஒரு இலக்கு நிர்ணயித்து அதன் வழியில் பயணிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் முக்கிய பங்கு வைக்க வேண்டும்” என்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அவர் திடீரென ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT