erode east by election minister kn nehru and anbil mahesh poyyamozhi

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு சத்யா நகர் காலனி பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisment

ஈரோடு சத்யா நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்த நிலையில், பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, "ஈரோடு மாநகராட்சி தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னேறிய மாநகராட்சியாக மாற்றப்படும்" என்று உறுதி அளித்தார்.

Advertisment

முன்னதாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி தரும் தமிழக முதல்வரின் செயல்பாட்டிற்கு அங்கீகாரம் அளிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்" என்று தெரிவித்தார். பிரச்சாரத்தின் போது ஈரோடு திமுக நிர்வாகிகள் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் எனபலரும் உடன் இருந்தனர்.