ADVERTISEMENT

தூர்வாரியதாக கோடிக்கணக்கில் பணமும் அபேஸ்! இப்போ தண்ணீர் கொடுக்கவும் தண்ணீ காட்டுறாங்க! 

02:51 PM Oct 03, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


ADVERTISEMENT

காவிரியில் எதிர்பாராத விதமாக மழை, புயல் காரணமாக காவிரியில் அதிக அளவு தண்ணீர் விடப்பட்டு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அது மக்களுக்கு பயன்படும் வகையில் காவிரியின் கிளை ஆறுகளில் தண்ணீர் திறந்து விடுவார்கள் என விவசாயிகள் பெரிதும் நம்பி இருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை தண்ணீர் திறந்து விடாமல் பெருமளவு கொள்ளிடத்தில் திறந்து விட்டதால் ஏற்கவே மணல் கொள்ளையினால் பாதிக்கப்பட்ட கொள்ளிடத்தின் முக்கிய பாலம் மதகுகள் உடைந்து விழுந்தது. இதன் பிறகாவது தண்ணீர் விடுவார்கள் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.

இந்த நிலையில் கிளை ஆறுகள், ஏரிகளுக்கு தண்ணீர் இன்னும் வராத நிலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்கள் அறிவிப்பு வெளியிட ஆரம்பித்தனர். இந்த நிலையிலும் திருச்சியில் அரியாற்று பகுதியில் உள்ள தமிழ்நாடு விவசாய சங்கம் சின்னதுரை மற்றும் சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவி தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3.10.2018 காலை 6 மணி முதல், அல்லித்துறை , புங்கனூர் இணைப்பு பாலம் கீழ் அரியாற்றில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். காவிரி கிளையாற்றில் தண்ணீர் விட சொல்லி போராட்டம் பண்ண ஆரம்பித்தனர். ஆனால் கடந்த 3 மணி நேரமாக நடைபெறும் போராட்டத்திற்கு பேச்சு வார்த்தைக்கு கூட அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. .

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவி நம்மிடம், திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு பாசன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் 17 ஏரிகள், புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் மூலம் பாசனம் பெறும் 36 ஏரிகள், அரியாறு வடிநில கோட்டத்தின் கீழ், மழைநீர் வரத்து பெறும் 7 ஏரிகள் என மொத்தம் 60 ஏரிகளில் ரூ.29.78 கோடி மதிப்பில் குடிமரமாத்து பணிகள் நடைபெற்றதாக அறிவித்தார்கள்.


இத்தோடு மேலும், 2018-19ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு நிதியின் மூலம் ஆறுப்பாதுகாப்பு கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பாசன வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள், வடிகால்களை புனரமைக்க ரூ.3.10 கோடியும், அரியாறு வடிநில கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஆதாரங்களில் 8 பணிகளை மேற்கொள்ள ரூ.76 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பெற்றது என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் டி.பி.கணேஷன் சொல்லியிருந்தார்.

இவ்வளவு பணம் தூர்வாரி செலவு செய்தாக கணக்கு காண்பித்து விட்டு தற்போது தண்ணீர் விடாமல் இருப்பது எவ்வளவு துரோகம். மக்கள் பணத்தை இப்படி கொள்ளையடிக்கிறார்கள். அரியாற்றுக்கு தண்ணீர் விடவில்லை, புங்கனூர் ஏரிக்கு தண்ணீர் கேட்டோம் இதற்கு விடவில்லை. இப்படி விவசாயிகளை உயிரோடு சாவடிக்க நினைக்கிறார்கள் என்றார். தூர்வாரியதாக பணத்தையும் அபேஸ் பண்ணிட்டாங்க, இப்போ தண்ணீர் கொடுக்காம தண்ணீர் காட்டுறாங்க என கொதிப்போடு. பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT