ADVERTISEMENT

'பால், பேருந்து, மின் கட்டணம் எல்லாம் உயரப்போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேட்டி!

03:09 PM May 13, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் பேருந்து, பால் என அனைத்து கட்டணமும் உயரப்போவதாக எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி பள்ளியை திறந்து வைத்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''தினந்தோறும் காலை, மாலை என இரண்டு ஃஷிப்டுகளாக 10 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி கொடுத்து மூன்று மாதத்திற்கு பிறகு நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இதனால் பெண்கள் சுயமாக வேலைவாய்ப்பை மேற்கொண்டு குடும்பத்தை நடத்த 'அம்மாவின் அரசு' என கூறியவர், உடனடியாக ஆட்சியில் இல்லாததை சுதாரித்துக்கொண்டு அதிமுக இந்த திட்டத்தை ஏழை பெண்களுக்காக கொண்டு வந்துள்ளது'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''தற்போதைய அரசுக்கு மக்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லை. ஆரம்பத்தில் சொத்துவரியை உயர்த்தினார்கள். பேருந்து கட்டணத்தை உயர்த்தியே ஆகவேண்டும் வேறு வழியே கிடையாது. நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு எந்த திட்டத்தையும் இந்த அரசாங்கம் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. விரைவில் பேருந்து கட்டணத்தையும் உயர்த்தியாக வேண்டும், மின்கட்டண கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் ஏனென்றால் அவையெல்லாம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பால் விலையும் உயர இருக்கிறது. ஏற்கனவே எல்லா விலையும் உயர்ந்து போயிருக்கிறது. கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT