ADVERTISEMENT

’எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசியக்கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கும்’ -தம்பிதுரை 

09:49 AM Sep 28, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை திமுக புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.

ADVERTISEMENT

தமிழக அரசு சார்பில் 31 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது. அதன், நிறைவு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மரபு அடிப்படையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 31மாவட்டங்களிலும் நடைபெற்ற நூற்றாண்டு விழா கூட்டத்திலும் கட்சி பாகுபாடின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை திமுக புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது. அமைச்சர் அந்தஸ்தில் உள்ள ஸ்டாலின் எம்,ஜி.,ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும். மேலும், எம்.ஜி.ஆருடன் கலைஞருக்கு இருந்த நட்பை ஸ்டாலின் மறந்துவிடக்கூடாது’’என்று தெரிவித்துள்ளார் . மேலும், ‘’அதிமுகவை எம்.ஜி.ஆர். உருவாக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசியக்கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கும்’’என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT