ADVERTISEMENT

நாளை விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...

03:48 PM Mar 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (01.03.2021) மதிமுக மற்றும் விசிக கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாளை (02.03.2021) சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டப் பொருளாளர்கள் கூட்டம் நடைபெறும் என விசிக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் பணி, தேர்தல் நிதி தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT