DMK district secretaries meeting started

Advertisment

சட்டமன்றத் தேர்தலுக்கானவாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படஇருக்கிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியாகியிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்ப்பாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என நேற்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்பொழுது காணொலி காட்சி வாயிலாகதிமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் உடனானஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.