requesting double digit...

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, 15 இடங்கள் கேட்டு விருப்ப பட்டியலைக் கொடுத்துள்ளதாகவும், அதில்9தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவிசிக கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், திமுக 5 தொகுதிகளைத் தர முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இன்று (03.03.2021) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு விசிகவை அழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 10 தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பெற்றிருந்தது. அதேபோல்இந்தத் தேர்தலிலும்இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற விசிக முயற்சித்து வரும் நிலையில்,தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Advertisment

அதேபோல்திமுகவைப் பொறுத்தவரை, 180 தொகுதிகளில் திமுக போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும், மீதமுள்ள 54 தொகுதிகளில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.