ADVERTISEMENT

அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணம்- கிராமத்தின் பிரச்சனை தீர்ந்துடுமாம்!!

09:34 PM Jan 27, 2019 | raja@nakkheeran.in

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ளது சோமநாயக்கன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனையில் யாராவது சிக்கி கிராமத்தில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கவலைக்கொண்டனர். இதனை சரிச்செய்ய என்ன செய்ய வேண்டும் என ஊர் மக்கள் கூடி பேசும்போது, அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்குத்தும் திருமணம் செய்து வைத்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனச்சொல்லினர் இதனை ஊர்மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த ஊரில் உள்ள முருகன் கோயில் எதிரே அரசமரமும், வேப்பமரமும் அருகருகே உள்ளன. இதனால் இங்கேயே திருமணத்தை செய்து வைத்துவிடலாம் என முடிவு செய்து ஆணாக அரசமரத்தையும், பெண்ணாக வேப்பமரத்தையும் முடிவு செய்து திருமண பத்திரிக்கை அடித்து ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் வழங்கினர்.

ஜனவரி 28ந்தேதி முகூர்த்தநாளை முன்னிட்டு இன்று காலை இரு மரத்திற்கும் திருமணம் செய்யப்பட்டது. அரசமரத்துக்கும் - வேப்பமரத்தையும் மணமகன் - மகளாக புத்தாடை அணிவித்து ஜோடித்தனர். மங்கள வாத்தியம் இசைக்க முருகன் கோயில் பூசாரி வேப்பமரத்துக்கு தாலிக்கட்டினர். அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அச்சதை போட்டு ஆசிர்வதித்தனர். பின்னர் திருமணத்துக்கு வந்தவர்கள், மொழி எழுதினர். அதன்பின்னர் உணவு பரிமாறப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் உணவு உண்டனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் பேசும்போது, அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்துவைப்பது ஊருக்கு நன்மை விளைவிக்கும் என்பது எங்கள் கிராமத்தின் ஐதீகம். அதன்படி திருமணம் செய்து வைத்தோம், நிச்சயம் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT