ADVERTISEMENT

ஒன்றிய அலுவலகத்தில் முறைகேடு! 40 பேரிடம் விசாரணை! 

04:46 PM Aug 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் செயல்படுகின்றன. இந்த ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2011 முதல் 2019 வரை கிராமப்புறங்களில் நடைபெற்ற பல்வேறு அரசு திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், போலி ஆவணங்களை தயாரித்து பணிகள் முடிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் பணத்தை எடுத்துள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்த புகார்களை எல்லாம், சங்கராபுரம் ஒன்றிய குழு தலைவராக உள்ள சீனிவாசன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி திட்ட உதவி அலுவலர் அன்னபூரணியை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டார். அந்த உத்தரவினைத் தொடர்ந்து திட்ட உதவி அலுவலர் அன்னபூரணி, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று 40 அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமத் திட்டங்கள் நிறைவேற்றியதாக கூறி பொய்யான ஆவணங்கள் அடிப்படையில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT