ADVERTISEMENT

மீண்டும் பதிவாளருக்கு எதிராக குஸ்தி... அடிதடி... வீடியோ வெளியீடு! அதிர்ச்சியில் பல்கலைகழகத்தினர்....

12:27 AM Nov 13, 2019 | santhoshb@nakk…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து நிர்வாக குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருந்து வருகிறது.

ADVERTISEMENT


கடந்த 7ம் தேதி பதிவாளர் சுதா உத்தரவின்படி, அறிவியல் மற்றும் பேராசிரியர் ஜெனிபாவின் தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. அதற்கான சாவியுடன் ஜெனிபா வர, பேராசிரியர் கலைச்செல்வன் என்பவர், ''இவர் யார்? என்றார். மேலும் பேராசிரியர் ஜெனிபாவுக்கு அறை கொடுக்கமுடியாது என்று அவரை திட்டி வெளியே அனுப்புகிறார்.

ADVERTISEMENT


இதை அறிந்த துணைவேந்தர், இதுதொடர்பாக விசாரிக்க கலைச்செல்வனை அழைத்துள்ளார். துணைவேந்தர் அழைத்தும் கலைச்செல்வன் செல்லவில்லை. இதையடுத்து பதிவாளர் சுதா தன் உதவியாளரை அழைத்து ஜெனிபருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கம்யூட்டர் மற்றும் டேபிளை வைக்கும் படி உத்தரவிட்டார். ஊழியர்கள் பொருட்களை எடுத்து கொண்டு அறைக்குள் போக முற்பட வேகமாக, அங்கு வந்த பேராசிரியர் கலைசெல்வன் பொருட்களை எடுத்து தூக்கி வீசி அவர்களிடம் தகறாரில் ஈடுபட்டு அவர்களை பிடித்து தள்ளிவிடுகிறார்.


இதை அறிந்து வந்த பதிவாளர் சுதா, ''ஏன் சார் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள்'' என்று கேட்க, அதற்கு அவரை தகாதவார்தைகளால் திட்டியுள்ளார் கலைச்செல்வன். கலைச்செல்வன் நடவடிக்கையை துணைவேந்தரிடம் புகாராக தெரிவிக்க, அடுத்தடுத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த சங்க நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து இப்படி தொடர்ச்சியாக அநாகரிகமாக நடப்பது நம் பல்கலைகழகத்திற்கு அவமானமாக இருக்கிறது, உடனே சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாராக கொடுக்க, உடனே அடுத்த நாள் 9ம்தேதி செனட் கூட்டத்தில் தொடர்ச்சியாக இது போல் அநாகரிகமாக நடந்து கொண்ட பேராசிரியர் கலைசெல்வனை செனட் புல தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவு விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலையில் பேராசிரியர்கள் சிலர், ”இது முதல்முறை அல்ல. இந்த கலைச்செல்வன் எல்லோரையுமே அநாகரிகமாக பேசுவது, ஒறுமையில் திட்டுவது என்று தன் நடவடிக்கையில் அடாவடியாக நடந்து கொள்கிறார். நிர்மலாதேவி விசயத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தது, இந்த வளாகத்தில் உள்ளவர்களுக்கு தெரியும். பதிவாளர் சுதா பொறுப்பு பதிவாளராக மட்டுமே இருக்கிறார். தற்போது பதிவாளருக்கான தேர்வு நடக்க இருந்த நிலையில் அதை தடுக்கும் நோக்கில் இந்த தகராறு நடந்திருகுமோ என்று எண்ண தோன்றுகிறது என்றனர்.


இதுகுறித்து ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைபாளர் முரளி நம்மிடம், பொது அமைப்பிற்க்கு தொடர்ச்சியாக குந்தகம் விளைவிக்கும்படி பல்கலையின் மாண்பிற்கு அசிங்கமாக ஒரு பெண் பதிவாளரை தரக்குறைவான வார்தைகளால் திட்டுவது, அவரை மிரட்டுவது என்பது பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகும். இதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது.


முக்கிய பொறுப்பில் உள்ள பேராசிரியரே அடிதடியில் ஈடுபட்டு, அது ஆதாரபூர்வமாக வீடியோ வந்திருக்கிறது. இது மேலும் பல்கலையின் மாண்பை கேலிகூத்தாக்குகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். பல்கலையில் மாணவர்கள் எப்போதுதான் பாடம் படிப்பார்கள் என்று தெரியவில்லை. பெரும்தலைவர் காமராசரின் பெயரில் நடக்கும் பல்கலையில் அதற்கு எதிர்மறையான காமம், ஊழல், நிர்வாகத்தில் போட்டி பொறாமை பல்கலை வளாகத்தில் ரவுடிஸம் ஆள் வைத்து பேராசிரியரை அடித்தது அடுத்து பெண் பதிவாளருக்கு பெண் பேராசிரியருக்கு எதிராக அலுவலக வளாகத்திலேயே அடிதடி என்று சினிமாவை மிஞ்சும் வகையில் நடப்பது மிகுந்த வேதனையாகவே இருக்கிறது என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT