குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியின் தர்யாகஞ்ச், இந்தியா கேட், ஜும்மா மசூதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். தொடர் போராட்டம் காரணமாக டெல்லி ஐடிஒ, மண்டி ஹவுஸ் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

citizenship amendment bill 2019 delhi roads block peoples strikes

குறிப்பாக டெல்லி ஜூம்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ், பின்னர் அனுமதி வழங்கி உள்ளது. இந்த பேரணியில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த பேரணியை டெல்லி போலீசார் ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.