ADVERTISEMENT

மதுரைக்கு நேரடி குடிநீர் திட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்!

10:57 AM Dec 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூபாய் 33 கோடியில் ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

அதேபோல் மதுரையில் ரூபாய் 69.11 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டங்களையும் திறந்து வைத்த தமிழக முதல்வர், 2,236 பயனாளிகளுக்கு ரூபாய் 3.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூபாய் 1,295 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லோயர்கேம்பிலிருந்து குழாய் மூலம் நாள்தோறும் 125 எம்எல்டி குடிநீர் விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, வேலுமணி, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT