ADVERTISEMENT

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

02:50 PM Jan 27, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆண்டுதோறும் இந்த உத்தரவு தொடர்பான ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை மீறியதாகக் கூறி சில நிறுவனங்களுக்கு எதிராகக் குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலை உணவுப் பொருளாகச் சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரத் தடைச் சட்டத்தை பொறுத்தவரைக்கும், புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்துதலை முறைப்படுத்துவது பற்றித்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT