ADVERTISEMENT

குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி; மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

01:01 PM Nov 04, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெற்கு வாங்க கடலில் மத்திய பகுதிகளில் வரும் 6-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

தெற்கு வாங்க கடலில் மத்திய பகுதிகளில் வரும் 6-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் இதனால் தென்மேற்கு வாங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நவம்பர் 6 மற்றும் 8 தேதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும் எனவே மீனவர்கள் அந்த தினங்களில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசதத்தில் 15 சென்டி மீட்டர் மழையும், குன்னூர் மற்றும் மணிமுத்தாறில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT