ADVERTISEMENT

குமரியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!

08:01 AM Sep 09, 2019 | kalaimohan

குமரியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

ADVERTISEMENT

விநாயகர் சதூர்தி விழா கடந்த 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் அதேபோல் வீடுகளிலும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட வித,வித வடிவங்களில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் காலை மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.

ADVERTISEMENT


இந்தநிலையில் குமரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 6,7,8 ஆகிய ழூன்று நாட்கள் கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்க காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக கடல் மற்றும் ஆறுகள் என 11 இடங்களில் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்டியிருந்தன. கடந்த இரண்டு நாட்கள் சிவசேனா மற்றும் இந்து மகாசபா சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து நேற்று இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. இதில் சுசிந்திரம் தாணுமாலையன் கோவில் முன், தோவாளை முருகன் கோவில் அடிவாரம், நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல், திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோவில் முன், வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் கோவில் முன், செருப்பாலூர் முத்தாரம்மன் கோவில் முன், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக மேளம் தாளத்துடன் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி, மண்டைக்காடு, சொத்தவிளை, மிடாலம், தேங்காபட்டணம் கடல் மற்றும் திற்பரப்பு, குழித்துறை தாமிரபரணி ஆற்று நீர்நிலைகளிலும் கரைக்கப்பட்டன.

இதையொட்டி குமரி மாவட்டம் முமுவ தும் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடியில் இருந்து 5 கம்பெனி பட்டாலியன் உட்பட 800 போலிசாரும் அதேபோல் குமரி மாவட்டத்தில் இருந்து 2ஆயிரம் போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டியிருந்தனர். இதைதொடர்ந்து போக்குவரத்துகளும் அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டியிருந்தன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT