கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையேமோதல் சம்பவங்கள் ஏற்பட்டது. அதையடுத்து, இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் தான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர்கள் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று நடைபெற்றது.

Advertisment

CUDDALORE

மங்கலம்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 63 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மங்கலம்பேட்டை நகர் முழுவதும் சுற்றிவிட்டு, இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் ஊர்வலம் சென்றன. அதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதேசமயம் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக கடலூர் மற்றும் விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் தலைமையில் 6 ஏ.எஸ்.பிகள் மற்றும் டி.எஸ்.பிகள், 20 காவல் ஆய்வாளர்கள், 67 உதவி ஆய்வாளர்கள் பார்வையில் 1050 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

CUDDLORE

Advertisment

மேலும் விநாயகர் செல்லும் வழியில் மசூதிகள் இருப்பதால், சாலையின் இருபுறங்களிலும், ஒன்றன் பின் ஒன்றாக வந்த ஒவ்வொரு சிலைக்கும் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பின்னர் அனைத்து சிலைகளும் கடலூர் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.