ADVERTISEMENT

அதிமுக அமைச்சரின் அண்ணி உள்ளாட்சி தேர்தலில் தோல்வி...!

09:46 AM Jan 04, 2020 | Anonymous (not verified)

தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள மேல் குமாரமங்கலம். இந்த ஊர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அமைச்சர் சம்பத்தின் மூத்த சகோதரர் தண்டபாணியின் மனைவி கௌரி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதே ஊரை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி மகாலட்சுமி போட்டியிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



கௌரி தண்டபாணியை வெற்றிபெற வைக்க அமைச்சர் சம்பத்தின் குடும்பத்தினர் தீவீரமாக களப்பணியாற்றினர். இடைத் தேர்தல் போல இந்தத் தேர்தலிலும் வாக்குக்கு ரூபாய் 1,000 முதல் 3,000 வரை கொடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இருந்த போதிலும், வாக்கு எண்ணிக்கை முடிவில் அமைச்சரின் அண்ணி கௌரி தண்டபாணி தோல்வியடைந்தார். மகாலட்சுமி வெற்றி பெற்றார். சொந்த ஊரில் அமைச்சரின் அண்ணி தோல்வியடைந்தது அப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT