ADVERTISEMENT

"கோவையில் கலவரம் ஏற்படுத்த சதி"- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

05:36 PM Feb 18, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. கொறடா வேலுமணிக்கு பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக மிரட்டல் விடுத்த தி.மு.க.வினருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. குண்டர்களை வெளியேற்ற அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கோவையில் ரவுடிகளை வெளியேற்ற எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவையில் ரவுடிகளுக்கு ஆதரவாக மாநகர காவல்துறை செயல்படுவது கண்டனத்துக்குரியது.

கோவையில் ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது பிரச்சனை உண்டாக்கித் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய நினைக்கும் தி.மு.க.வின் எண்ணம் பலிக்காது. கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கலவரம் ஏற்படுத்த சதி நடக்கிறது" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT