ADVERTISEMENT

புகாரளித்த வழக்கறிஞர்... நடவடிக்கை எடுக்காத காவல்துறை... உத்தரவிட்ட நீதிமன்றம்!

04:27 PM Oct 23, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் எம்.கபிலன்(59). இவர் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அறிவழகன், உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஏட்டு பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத் தாக்கல் செய்தார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திற்கு தன்னுடைய மனைவி பெயரில் பட்டா வாங்குவதற்காக அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த ஆர்.ஐ மணி மற்றும் தங்கராசு, சுப்பிரமணியன் ஆகியோர் வாய்த்தகராறு செய்தும், சாதிப் பெயரைக் கூறியும் அடித்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஸ்ரீரங்கம் போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியன் வாக்குமூலம் பெற்றுள்ளார். பின்னர் அதன் அடிப்படையில் எவ்வித வழக்கும் பதியவில்லை.

இது தொடர்பாக போலீஸ் கமிஷ்னருக்கு பதிவு தபால் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி விட்டு ஆகஸ்ட் 30ம் தேதி இன்ஸ்பெக்டர் அறிவழகன்- எஸ்ஐ சிவசுப்பிரமணியன் ஆகியோரை நேரில் சந்தித்து எழுத்து மூலமாக புகார் கொடுத்துள்ளார். அதன் பின்னரும் அவர் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் பொது ஊழியரான போலீஸ் அதிகாரிகள் தங்கள் கடமையில் இருந்து தவறி, வேண்டும் என்றே குற்றம் இழைத்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி செல்வம், சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன், எஸ்ஐ சிவசுப்பிரமணியன் மற்றும் ஏட்டு பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT