ADVERTISEMENT

திருநீற்று புதன் அன்று திரளான கிறிஸ்தவர்கள் கொண்டாட்டம்; பின்னணி என்ன?

01:10 PM Feb 14, 2024 | ArunPrakash

கோப்புப்படம்
உலகம் முழுவதும் இன்று திரளான கிறிஸ்தவர்கள் திருநீற்று புதனை அனுசரித்து நெற்றியில் குருவானவர் திருநீற்றைப்பூசி மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் திரும்பவும் மண்ணிற்கே செல்வாய் என ஆசிர்வதிப்பார்கள்.

ADVERTISEMENT

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள். இதுவே திருநீற்று புதனிலிருந்து 46-ஆம் நாளாக இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும்.

ADVERTISEMENT

இந்த 46 நாள் தவக்காலங்களில் 16 வயதுக்குள் இருப்பவர்கள் சுத்த போசனமும் 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் ஒரு சந்தியும் அனுசரிக்க வேண்டும். மேலும் இந்த சாம்பல் புதன் அன்று அருட்தந்தை லியோ மரியா ஜோசப் தலைமை தாங்கி மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய் என ஒவ்வொரு கிறிஸ்தவர்கள் நெற்றியிலும் திருநீற்றை பூசி அப்பம் மற்றும் ஜெப மாலைகளை அணிவித்து சிறப்பு ஜெபத்தை மேற்கொண்டு ஆசீர்வதித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT