ADVERTISEMENT

சாக்லெட்  திருடி சிக்கிக் கொண்ட சென்னை பெண் போலீஸ்... தட்டிகேட்ட ஊழியருக்கு கும்மாங்குத்து

01:03 PM Jul 26, 2018 | kamalkumar

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் நந்தினி...இவர் எழும்பூரில் உள்ள நீல்கிரிஸ் கடைக்கு சென்றுள்ளார். அங்கு செல்போன் பேசிக்கொண்டே நீண்ட நேரமாக கடைக்குள் சுற்றி வந்த நந்தினி இறுதியாக ஒரு பொருளை மட்டும் பில் போட கொடுத்துள்ளார். அப்போது அந்த பில் போடும் ஊழியர் உங்கள் பாக்கெட்டுகளில் வைத்துள்ள பொருட்களையும் எடுத்து தாருங்கள் பில் போட்டவுடன் எடுத்துச் செல்லுங்கள் என்றார்.


ADVERTISEMENT



அதற்கு நந்தினி அப்படியெல்லாம் நான் எதையும் எடுக்கவில்லை என்றார். அந்த ஊழியரோ நீங்கள் பொருட்களை எடுத்து பாக்கெட்டுகளில் வைத்ததை சிசிடிவி கேமராக்கள் மூலம் பார்த்துவிட்டோம் என்றார், இருந்தும் நந்தினி பிடிவாதம் பிடித்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து பெண் ஊழியர்களை கொண்டு நந்தினியை சோதனையிட்டனர். அதில் சாக்லேட்டுகள், ஓடோமாஸ் ஆகியவற்றை அவர் திருடி வைத்திருந்தார். இதையடுத்து இனி திருட மாட்டேன் என்று கடை ஊழியர்கள் நந்தினியிடம் எழுதி வாங்கிக் கொண்டனர் தகவலறிந்த நந்தினியின் கணவர் அடியாட்களுடன் வந்து கடையில் இருந்த ஊழியர்களை தாக்கினார். இதில் இருவர் படுகாயமடைந்தார். மேலும் பெண் காவலர் திருடிய வீடியோவும், அவரது கணவர் ஊழியர்களை தாக்கிய வீடியோவும் வைரலானது.

இதையடுத்து நந்தினியை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். திருடர்களை பிடிக்கும் போலீஸே இப்படி திருடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது...!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT