ADVERTISEMENT

கணவனை மீறி வேலைக்குச் சென்றதால் மனைவி கழுத்தறுத்துக் கொலை... அநாதையான குழந்தைகள்!

10:48 PM Sep 22, 2020 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலைக்குச் செல்லும் குடும்பப் பெண்கள் மீது ஓரு சில கணவன்மாா்கள் சந்தேகபட்டு தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதால், பல குடும்பங்கள் எதிா்காலமின்றி கஷ்டப்படுவதாக, சமீபத்தில் பெண்கள் அமைப்பு ஓரு தகவலை வெளியிட்டது. இதில் பொிதும் பாதிக்கப்படுவது அந்தப் பெற்றோா்களை நம்பியிருக்கும் குழந்தைகள் தான். அப்படி நடந்த ஓரு சம்பவத்தில் குமாி மாவட்டம் குருந்தன்கோட்டில் இரண்டு பிள்ளைகள் அநாதைகளாகியுள்ளனா்.

குருந்தன்கோடு ஆசாாிவிளையைச் சோ்ந்தவா் ராஜசேகா் (42). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவரது மனைவி தங்கம் (37). இவா்களின் மகன் ராகுல் (11) 6-ஆம் வகுப்பு படிக்கிறார். மகள் தனுஷிகா (10) 5 -ஆம் வகுப்பு படிக்கிறார். ராஜசேகா் மது குடிக்கும் பழக்கம் உடையவா். தினமும் வேலைக்குச் சென்று வீடுதிரும்பும் போது, சம்பாதித்த பணத்தில் முழுக்க குடித்துவிட்டு வருவதால் தினமும் கணவன் மனைவிக்கு இடையை சண்டை வருமாம்.

மேலும் வீட்டுச் செலவுக்கும் பணம் இல்லாமல், தங்கம் அக்கம் பக்கத்தில் உள்ளவா்களிடம் கடன் வாங்கிச் செலவு செய்து வந்துள்ளாா். இதனால் கடன் பெருகியதால், தங்கம் அருகில் உள்ள முந்திாி ஆலைக்கு வேலைக்குச் சென்றாா். அவர் வேலைக்குச் செல்வது ராஜசேகருக்கு பிடிக்கவில்லை. இதனால், மனைவி தங்கம் வேலைக்குச் செல்வதை சில நாட்களுக்கு முன் நிறுத்தினார். இருந்த போதிலும் ராஜசேகா் முறையாக வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்காததால் மீண்டும் தங்கம் முந்திாி ஆலைக்கு வேலைக்குச் சென்றார்.

இதனால் தங்கம் மீது சந்தேகப்பட்ட ராஜசேகா், அவரை தவறாகப் பேசி சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (21-ஆம் தேதி) இரவு கணவன் மனைவிக்கிடையை சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு மனைவி தங்கம், அழுது கொண்டே தனியாக தூங்கச் சென்றார். இந்த நிலையில் குழந்தைகள் இரண்டும் தூங்கியதும், குடிபோதையில் இருந்த ராஜசேகா் தேங்காய் பறிக்கும் வெட்டுக் கத்தியால் தங்கத்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பின்னா், ராஜசேகரும் வீட்டுமுன் உள்ள ஓரு கம்பில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி எதுவும் தொியாத அந்தக் குழந்தைகள் நள்ளிரவில் விழித்துப் பாா்க்கும் போது, அம்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதும், வெளியில் தந்தை தூக்கில் தொங்குவதையும் கண்டு கதறி அழுதனா். பின்னா் குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்தனா்.

பெற்றோரை இழந்து நிற்கும் அந்தக் பிஞ்சி குழந்தைகளைக் கண்டு அப்பகுதி மக்கள் பாிதாபத்தோடு கண்ணீா் விட்டனா்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT