Skip to main content

கணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி!

விஜய், காமினி ரெண்டு பேருமே ட்ரக் அடிக்ட்ஸ். அவங்களால, என் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்க்கையே போச்சு''’’

-அருப்புக்கோட்டையில் நம்மைச் சந்தித்த கமலா பேச ஆரம்பித்ததுமே அழுதார்.

அந்த இருவராலும் புத்தி பேதலித்தவர்போல் ஆகிவிட்டாள் ஐஸ்வர்யா' என்று குமுறிய கமலா, ஐஸ்வர்யாவிடம் காமினியின் அண்ணன் ஹரிஷ், "உன் புருஷன் விஜய், என் தங்கச்சியோட வாட்ஸ்-அப் நம்பருக்கு, அவனோட நிர்வாண போட்டோவை அனுப்பிருக்கான். பதிலுக்கு இவளும் அவளோட நிர்வாண போட்டோவை அனுப்பிருக்கா. இது நல்லாயில்ல. உன் புருஷனை கண்டிச்சு வை'ன்னு திட்டிவிட்டு, தங்கையின் வாட்ஸ்-அப் நம்பரிலிருந்து விஜய்யின் நிர்வாணப் படத்தை ஐஸ்வர்யாவுக்கு அனுப்பினான். ஹரிஷ் என்னோட சொந்த அண்ணன் மகன்தான். என்ன நடந்துச்சுன்னு அவன்கிட்டயே கேளுங்க...''’என்று ஹரிஷின் செல் நம்பரை தந்தார்.

 

husbandசென்னையிலுள்ள ஹரிஷை தொடர்புகொண்டோம். “ஆமா... என்னோட சொந்தக்காரங்க (தங்கை காமினி) போன்ல இருக்கிற வாட்ஸ்-அப்ல விஜய்யோட நிர்வாணப் படத்தைப் பார்த்தேன். அதை ஐஸ்வர்யா அனுப்பி வைக்கச் சொன்னா அனுப்பி வச்சேன்... அவ்வளவுதான். அந்த சொந்தக்காரங்க யாருன்னு உங்ககிட்ட சொல்லவேண்டிய அவசியம் இல்ல. இது சம்பந்தமா கேளம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம். அதற்கான எஃப்.ஐ.ஆர். எங்ககிட்ட இருக்கு. இது சம்பந்தமா எனக்கு போன் பண்ணாதீங்க. பத்திரிகைகாரங்கன்னா எனக்கு ஒண்ணும் பெரிசில்ல. நான் அதைவிட ரொம்ப பெரிய ஆளு. நீங்க என்ன வேணும்னாலும் எழுதிக்கங்க''’என்று ஏனோ கத்தினார்.


"ஹரிஷ், தன்னை பெரிய ஆள் என்கிறாரே?'’கமலாவிடம் கேட்டோம். "அவன் பெரிய ஆளு இல்ல. அவனோட தாய்மாமா ஹரிதான் பெரிய ஆளு. "சிங்கம்' படத்தோட டைரக்டர் ஹரி தெரியும்ல. அவரோட சொந்தத் தங்கை பாரதியோட மகன்தான் இந்த ஹரிஷ். இத்தனைக்கும் ஹரிஷோட அப்பா ராஜாசிங் என்னோட சொந்த அண்ணன்தான். இந்த விவகாரத்துல, சினிமா இயக்குநர் ஒருவர் அவரோட செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் டிபார்ட்மென்டை செயல்படவிடாம பண்ணிட்டாரு. ஆனாலும், நாங்க விடல. குற்றவாளிகளை நாங்களே தேடிப்பிடிச்சு, போலீஸ்கிட்ட ஒப்படைச்சு, நடவடிக்கை எடுக்க வச்சோம்''’என்று பெருமூச்சு விட்டார்.

  parentஐஸ்வர்யா வாழ்க்கையில் காமினி எப்படி குறுக்கிட்டார்?

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, சென்னை தி.நகரில் தாய், தந்தையருடன் வசித்து வருகிறார். சென்னை -கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போது விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வசதியில் மிகவும் பின்தங்கியிருந்த மருமகன் விஜய்க்கு, ரூ.75 லட்சம் பெறுமான வீடு, ரெடிமேட் கடையை விரிவுபடுத்த ரூ.30 லட்சம், ரூ.7 லட்சத்தில் கார் என எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தார் கமலா. ஆனால், குடிப்பழக்கத்தோடு ட்ரக் அடிக்ட்டாகவும் இருந்த விஜய், தொழிலில் பெரும் நஷ்டப்பட்டார். இரண்டு தடவை கர்ப்பமாகி, தாய் வீட்டுக்கு ஐஸ்வர்யா சென்ற போது, தேடிவந்து விஜய்க்கு ‘நட்பானார் ராஜாசிங் மகளான காமினி. விஜய்யும் காமினியும் அண்ணன்-தங்கை உறவுமுறை என்பதால், முதலில் ஐஸ்வர்யாவுக்குச் சந்தேகமே எழவில்லை.

நாளடைவில், கணவனின் போக்கில் மாற்றத்தைக் கண்டபோது, நண்பர் ஒருவர் எதேச்சையாக, விஜய்-காமினியின் நடவடிக்கைகள் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கூத்தடிப்பதுவரை சென்றுவிட்டது என்று சொன்ன பிறகுதான் உஷாரானார் ஐஸ்வர்யா. உடனே, கணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்தார்; அதிர்ந்தார். காமினியின் தூண்டுதலால், விஜய் வேண்டுமென்றே கார் விபத்தை ஏற்படுத்தித் தன்னைக் கொல்வதற்காகத் திட்டமிட்டதில், தன்னுடைய மூன்றுமாத குழந்தை ரியா பலியானதை உணர்ந்தார். போதைப் பழக்கத்துக்கு தீவிர அடிமையான விஜய், காமினியின் சேர்க்கையினால், மீண்டும் தன்னைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு, அது முடியாமல் போய், விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமானது கண்டு கொதித்துப்போனார். காஞ்சிபுரம் மாவட்டம் -கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். 294(க்ஷ), 323, 506(1) மற்றும் 507-வது பிரிவுகளின் கீழ் விஜய், அவருடைய அம்மா கலாதாஸ் மற்றும் ரவி மீது வழக்கு பதிவாகி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


"நான் விஜய் மீது வைத்திருந்தது உண்மையான காதல். அவன் எனக்கு பண்ணியதோ துரோகம். அடி, உதை என்று அத்தனை கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டேன். அவனுடைய ஃப்ரண்ட் ரவிகூட எங்கள் குடும்ப பிரச்சனையில் தலையிட்டு என்னைத் திட்டுவான். விஜய்யின் அம்மா கலா அசிங்கமாகப் பேசி என்னை அடித்ததை மறக்கவே முடியாது. சொந்த அண்ணன் ராஜாசிங்கின் மகள் காமினி என்பதால், என் அம்மா கமலா, வழக்கிலிருந்து அவளைக் காப்பாற்றிவிட்டார். விஜய்யை என்னிடமிருந்து பிரித்த காமினி ஒரு ட்ரக் அடிக்ட். அவளையும் கைது செய்ய வேண்டும்''’என்று நம்மிடம் ஆவேசமானார் ஐஸ்வர்யா.

காமினியின் தந்தை ராஜாசிங்கை தொடர்புகொண்டோம். ""கமலாவும் ஐஸ்வர்யாவும். கதையைத் திரித்துப் பேசுகிறார்கள். ஐந்தாறு கோடி பெறுமான சொத்துக்களை வைத்துக்கொண்டு, பழைய பகையை மனதில் வைத்து, எங்கள் குடும்பத்தின் பெயரைக் கெடுக்க நினைக்கிறார்கள். நான் சாதாரண கார் புரோக்கர். சினிமா இயக்குநர், தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். அவர் பெயரையும் கெடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள். என் மகள் காமினிக்கு அவ்வப்போது சாமி வரும். அதற்கான ட்ரீட்மெண்ட்டில் இருக்கிறாள்''’என்றார்.

கமலாவோ, "போதைக்கு அடிமையானதால்தான் காமினிக்கு ட்ரீட்மெண்ட் நடக்கிறது. அவளுடைய நச்சரிப்பால், விஜய் திட்டமிட்டு ஏற்படுத்திய கார் விபத்தில், என் மகளுக்கு முகத்தில் ஒருபகுதி சிதைந்துபோனது. பிறந்து ஆறுமாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக்கொண்டு ஐஸ்வர்யா அவஸ்தைப்படுகிறார்''’என்றார் வேதனையுடன்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்